இந்தியா

பஞ்சாபில் இரும்பு பாலம் இடிந்து விபத்து- 2 லாரிகள் கவிழ்ந்தன

இரும்பு பாலத்தை 2 லாரிகள் கடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென்று பாலம் இடிந்து விழுந்தது.

பாலம் சரிந்ததற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா-சங்ரூர் புறவழிச்சாலையில் பாசியானா கிராமத்திற்கு அருகே பக்ரா கால்வாயின் குறுக்கே இரும்பு பாலம் உள்ளது. இன்று அதிகாலை இரும்பு பாலத்தை 2 லாரிகள் கடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென்று பாலம் இடிந்து விழுந்தது.

விபத்து

இதில் 2 லாரிகளும் இடிபாடுகளுக்குள் சிக்கி கவிழ்ந்தன. சிறிது நேரத்திலேயே ஒரு லாரி தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. பாலம் சரிந்ததற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT