இந்தியா

ஜூலை 15-க்குள் ஐஆர்சிடிசியின் புதிய இணையதளம்: ரெயில்வே அமைச்சர் அறிவிப்பு

ஓடிபி பிரச்சனைகள் மற்றும் தட்கல் முன்பதிவுகளின் சிக்கலுக்கு தீர்வு காணப்படும்.

ரெயில் பயணங்களை முன்பதிவு செய்ய தினமும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ ரெயில்வே இணையதளத்தில் உள்ள கேப்ட்சா சிக்கல் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டன.

அதிகபட்ச பயன்பாட்டு நேரங்களில் ஏற்படும் செயலிழப்புகள் மற்றும் தடங்கல்களுக்காக ஐஆர்சிடிசி இணையதளம் நீண்ட காலமாகவே பாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஓடிபி பிரச்சனைகள் மற்றும் தட்கல் முன்பதிவுகளின் போது ஏற்படும் சர்வர் நெரிசல்கள் ஆகியவை பயணிகளின் முக்கிய புகார்களில் ஒன்றாகும்.

இதனையடுத்து  ஜூலை 15-ஆம் தேதிக்குள் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினின் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.