இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்!

2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் 'ஆரோக்கியமான முதுமை அடைதலுக்கான யோகா'.

கொல்கத்தாவில் நடைபெறவுள்ள 12வது சர்வதேச யோகா தினம் கொண்டாட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய ஆயுஷ் அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் தலைமையில் கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ரெட் ரோட்டில் யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

மேலும், முதுமையை நோக்கி பயணிக்கும் காலகட்டத்தில் மக்களின் உடல் ஆரோக்கியம், மன நலம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் யோகாவின் பங்கு அதிகமாகும்.

இதனை எடுத்துரைக்கும் வகையில், இந்த ஆண்டுக்கான சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் Yoga for Healthy Ageing.

மேலும் வெளிநாடுகளில் உள்ள 210-க்கும் மேற்பட்ட இந்தியத் தூதரகங்கள், இந்தியப் பண்பாட்டுத் தொடர்பு மன்றத்துடன் இணைந்து உலகெங்கிலும் சுமார் 2,500 இடங்களில் யோகா தினக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.