இந்தியா

‘பணவீக்க நாயகன் மோடி மீண்டும் தனது வேலையை காட்டுகிறார்’ - ராகுல் காந்தி

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி கண்டனம்.

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதற்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

“மக்கள் பணம் யாருக்கும் தெரியாமல், அமைதியாக சுரண்டுப்படுவதற்காக தவணை முறையில் பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்துகின்றனர். ஒரு பொருளாதாரப் புயல் வரப்போகிறது என்று நான் பல மாதங்களாக எச்சரித்து வருகிறேன்.

ஆனால் மோடி ஜி, எப்போதும் போல, அப்போது தேர்தல்களில் பிஸியாக இருந்தார். தேர்தல்கள் முடிந்த அடுத்த கணமே, பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.8 உயர்த்தப்பட்டது.

இந்த விலை உயர்வு தொடர்ந்துகொண்டே இருக்கும. பணவீக்க நாயகன் மோடியின் ஒரே வேலை இதுதான்; தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகள் அளிப்பது, மற்ற நேரங்களில், மக்களின் பாக்கெட்டைத் தாக்குவது. பணவீக்க நாயகன் மோடி மீண்டும் தன் கைவரிசையைக் காட்டுகிறார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.