இந்தியா

48 வயதான பெண்ணின் வயிற்றில் இருந்த 3 கிலோ கட்டி அகற்றம்

பல்வேறு உடல் உபாதைகளுடன் பாதிக்கப்பட்டு வந்த பெண்ணுக்கு சிகிச்சை மேற்கொண்ட இந்தூர் மருத்துவர்கள்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் கேர் சிஹெச்எல் பல்நோக்கு மருத்துவமனை இயங்கி வருகிறது.

இந்த மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான வயிற்று வலி மற்றும் அதிகப்படியான ரத்தப்போக்கு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுடன் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து 48 வயதான அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் வயிற்றில் கால்பந்து அளவில் சுமார் மூன்று கிலோ எடை கொண்ட கட்டி இருந்ததை கண்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், வயிற்றில் இருந்த கட்டி பத்திரமாக அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேர் சிஹெச்எல் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணரான டாக்டர் மனோரஞ்சன் பர்ன்வால் கூறும்போது, “நான்கு மாதங்களுக்கு முன்பே தலைப்பகுதியிலுள்ள மூளை நோயால் இந்த நோயாளி பாதிக்கப்பட்டு இருந்ததால், இது எங்களுக்கு மேலும் சிக்கலானதாக இருந்தது” என்று கூறினார்.