இந்தியா

இண்டிகோ விமானத்தில் பவர் பேங்க் வெடித்து தீ

மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய பவர் பேங்க் எனும் சாதனம் பயன்படுத்தப்படுகிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போன் , லேப் டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய பவர் பேங்க் எனப்படும் சாதனம் பயன்படுத்தப்படுகிறது.

வெளியூர், வெளிநாடு பயணங்கள் போகும் போது, பவர் பேங்கையும் கையோடு எடுத்துச் செல்லும் நிலை தொடர்கிறது.

சமீப காலமாக விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் பவர் பேங்க், அதிக வெப்பம் காரணமாக தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், சண்டிகர் விமான நிலையத்தில் இண்டிகோ பயணிகள் விமானத்தில் பவர் பேங்க் வெடித்து தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

ஐதராபாத்தில் இருந்து சண்டிகரில் தரையிறங்கிய விமானத்தில் பவர் பேங்க் வெடித்து புகை சூழ்ந்ததால் பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

விமானத்தில் பவர் பேங்க் வெடித்தது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.