போர்க்கப்பல்கள் 
இந்தியா

Warships | வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பு: தயார் நிலையில் இந்திய கடற்படை

Paramasivan

இரண்டு இந்திய எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடந்துள்ளன. இந்திய கப்பல்களுக்கு மட்டும் இந்த வழியாக செல்ல ஈரான் அனுமதி அளித்தது.

அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. அந்த வழியாகச் செல்ல முயலும் எந்த ஒரு கப்பலும் அழிக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

உலகின் 20 சதவீத எண்ணெய் தேவைக்கான ஏற்றுமதி பாதையாக வளைகுடா நாடுகளை இந்த பாதையே உலகத்துடன் இணைத்துவந்தது. எனவே ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இரண்டு இந்திய எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாகக் கடந்துள்ளன. இந்திய கப்பல்கள் இந்த வழியாக செல்ல ஈரான் அனுமதி அளித்தது.

இந்நிலையில், பாரசீக வளைகுடாவிற்கு அருகில் பல இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கிருந்து இந்தியாவை நோக்கி வரும் வணிகக் கப்பல்களுக்குத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்க அவை தயார் நிலையில் உள்ளன என தகவல் வெளியானது.