இந்தியா

இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சிக்கு காவி நிறம்- பிரியங்கா காந்தி கண்டனம்

இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு இந்த புதிய காவி நிற ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி நீல நிறத்தில் இருந்து, காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போது ஹாக்கி மைதானங்களும் (நீல நிறம்), வீரர்களின் ஜெர்சியும் ஒரேநிறத்தில் இருப்பதால், பந்தை பாஸ் செய்வது, வீரர்களை அடையாளம் காண்பது சிரமமாக இருப்பதாக பயிற்சியாளர்களும், வீரர்களும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையொட்டியே, மாற்று நிறங்களாக மஞ்சள் அல்லது காவி நிறத்தைப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டதாகவும், அதில் காவி இந்தியாவின் தேசிய கொடியில் இருப்பதால், தைரியம், தியாகம் மற்றும் தேசியப் பெருமிதத்தை அடையாளப்படுத்துவதால் அந்த நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஹாக்கி இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

நிறம் மாற்றம்

2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 30 வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ள FIH உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கும் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு இந்த புதிய காவி நிற ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக இதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா காந்தி கண்டனம்

இந்திய ஆக்கி அணியின் சீருடை நீல நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆடை நெறிமுறைகள் மற்றும் கல்விக் கொள்கைகள் மூலமாக வரலாற்றை மீண்டும் மாற்றி எழுத மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.