இந்தியா

புதிய ராணுவ தளபதியாக தீரஜ் சேத் நியமனம்

லெப்டினன்ட் ஜெனரல் சேத் 1986 டிசம்பரில் கவசப் படையில் இராணுவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்திய ராணுவத் தளபதியின் (Army Chief) ஜெனரல் உபேந்திர திவேதியின் பதவிக்காலம் ஜூன் 30 அன்று முடிவு பெறவுள்ளது.

இந்நிலையில் புதிய ராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராணுவத் துணைத் தளபதியாகப் பணியாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் சேத் 1986 டிசம்பரில் கவசப் படையில் ராணுவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்கள் நீடித்த சிறப்பான ராணுவப் பணியில் செயல்பாட்டு வந்தார்.

இவர் வியூகம், திறன் மேம்பாடு மற்றும் நிறுவனத் துறைகள் எனப் பல்வேறு பிரிவுகளில் விரிவான அனுபவம் பெற்றவர்.

இந்திய ராணுவத்தின் போர்த் திறனுக்கும் நீண்டகால உருமாற்றத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரலாக, இந்திய ராணுவத்தின் தலைசிறந்த தாக்குதல் பிரிவுகளில் ஒன்றான சுதர்ஷன் சக்ரா கார்ப்ஸுக்கும் தீரஜ் தலைமை தாங்கினார்.

அதனைத் தொடர்ந்து அவர், டெல்லி பகுதியின் தளபதியாகப் பணியாற்றி, முக்கிய தேசிய மற்றும் சர்வதேச இராணுவ ஈடுபாடுகள் தொடர்பான பொறுப்புகளையும் மேற்கொண்டார்.

இந்நிலையில் இராணுவத் தரைப்படை தளபதியாகப் பதவி உயர்வு பெற்றதும், தென்மேற்கு மற்றும் தெற்குப் படைப்பிரிவுகளுக்குத் தலைமை தாங்கினார்.

இதன் மூலம், இரண்டு செயல்பாட்டு ராணுவப் படைப்பிரிவுகளுக்குத் தலைமை தாங்கியவர் என்ற பெருமையை பெற்றார் லெப்டினன்ட் ஜெனரல் சேத்.