பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் ஒரு சொட்டு கூட கிடைக்காமல் செய்ய இந்தியா தயங்காது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த மாநாட்டில் பேசிய அவர்,
"பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் இந்திய மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தவர்கள், எங்களிடம் இருந்து தண்ணீரை எதிர்பார்க்கக் கூடாது.
பயங்கரவாதத்தின் கூட்டாளிகளுக்கும், மனிதநேயத்தின் எதிரிகளுக்கும் சிந்து நதி நீர் சென்றடைவதை என்டிஏ அரசு அனுமதிக்காது." என்று தெரிவித்தார்.
மேலும், 'இரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓட முடியாது' என முன்னர் மோடி கூறியதை நினைவு கூர்ந்த அவர்,
"கள யதார்த்தத்திற்கு மாறாக எந்தவொரு பழைய ஒப்பந்தமும் தொடர முடியாது என்பதை இந்தியா ஏற்கனவே உலகிற்கு உணர்த்திவிட்டது.
அமைதி மற்றும் நல்லிணக்க மொழியைப் புரிந்து கொள்ளாத எதிரிகளுக்கு அவர்களின் பாணியிலேயே எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர் மூலம் உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளது.
இந்தியாவிடம் உலகிற்குத் தேவையான தடுப்பூசி ஆற்றல் மட்டுமல்ல, எதிரிகளை நடுங்க வைக்கும் ஆயுத ஆற்றலும் உள்ளது என்பதை உலகம் தற்போது உணர்ந்துள்ளது." என தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் உடன் நதிநீரை பகிருகும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.