அக்னி பிரைம் ஏவுகணை பரிசோதனை 
இந்தியா

அக்னி பிரைம் ஏவுகணை - வெற்றிகரமாக பரிசோதனை

அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்கை தாக்கி அளிக்கும் அக்னி பிரைமில் புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலசோர்:

ஏவுகணை திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை அக்னி 1 முதல் அக்னி 5 வரை ஏவுகணைகளை சோதித்துள்ளது. இதில் அக்னி ஒன்று முதல் அக்னி 3 வரையிலான ஏவுகணைகள் ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ளது.  8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லும் வகையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 6 ஏவுகணையை இந்தியா உருவாக்கி வருகிறது.

இந்நிலையில் ஒடிசாவின் பாலசோர் கடற்கரை பகுதியில் அக்னி பிரைம் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. அக்னி பிரைம்  ஏவுகணை என்பது இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள அக்னி ஏவுகணைகளை விட மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை வகையாகும். இது 1,000 முதல் 2,000 கி.மீ. வரை சென்று எதிரிகளின் இலக்கை துள்ளியமாக தாக்கும் திறன் கொண்டது என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.