இந்தியா

சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை: மத்திய அரசு ஆலோசனை

சிறுவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது. இந்தத் தடையானது கடந்த ஆண்டு டிசம்பர் முதல் அமலுக்கு வந்தது.

மாலை மலர்

புதுடெல்லி:

இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கிக் கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.

எனவே 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது. இந்தத் தடையானது கடந்த ஆண்டு டிசம்பர் முதல் அமலுக்கு வந்தது.

ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து ஸ்பெயின், பிரான்சிலும் சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவிலும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரலாம என மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.