இந்தியா

ஐ.நா.வில் சிஏஏ குறித்து கேள்வி எழுப்பிய பாகிஸ்தான்: கண்டனம் தெரிவித்த இந்தியா

சிஏஏ குறித்து ஐ.நா.வில் கேள்வி எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.இந்தியா தொடர்புடைய விஷயங்களில் பாகிஸ்தான் தவறான கண்ணோட்டத்தை கொண்டுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம் பேசுகையில், அயோத்தி ராமர் கோவில் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஐ.நா.சபையில் சிஏஏ சட்டம் மற்றும் அயோத்தி ராமர் கோவில் குறித்து கேள்வி எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா.விற்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசித்ரா கம்போஜ் கூறியதாவது:

இந்த அவையில் பாகிஸ்தான் ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறது. உலகம் வளர்ந்து வருகிறது. இந்தியாவின் அண்டை நாடானது ஒரே இடத்தில் தேங்கி நிற்பதுடன், ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது.

எனது நாட்டுடன் தொடர்புடைய விஷயங்களில், அந்நாட்டு குழுவினர் தவறான கண்ணோட்டத்தை காண்பது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்தார்.