இந்தியா

மிகவும் மோசம்: உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் 157வது இடத்திற்கு பின்தங்கிய இந்தியா - காங்கிரஸ் கண்டனம்

இந்தியாவை 'மிகவும் மோசமான' (Very Serious) பிரிவில் இக்குறியீடு வகைப்படுத்தியுள்ளது.

2026-ஆம் ஆண்டுக்கான உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 157-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

இந்தியாவை 'மிகவும் மோசமான' (Very Serious) பிரிவில் இக்குறியீடு வகைப்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர்கள் மீதான வன்முறை, அரசியல் அழுத்தம் மற்றும் ஊடகங்களின் உரிமையாளர்களிடையே நிலவும் ஒருசார்பு நிலை போன்றவை இந்தியாவின் தரம் குறைய முக்கியக் காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுதந்திரமான ஊடகங்கள் ஜனநாயகத்தின் குரல்.

ஆனால், இன்று அந்த குரல் ஒடுக்கப்படுகிறது. அதிகாரத்திற்கு முன்னால் உண்மையை உரக்கச் சொல்லும் பத்திரிகையாளர்களுக்கு காங்கிரஸ் என்றும் துணையாக இருக்கும்" என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

நேற்று (மே 3) உலக உலகப் பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT