சுதந்திர தினம் 
இந்தியா

மேற்கு வங்கத்தின் இந்த நகரங்கள் ஆகஸ்ட் 18-இல் இந்தியாவுடன் இணைந்த தினத்தை கொண்டாடுவது ஏன்? - 1947இல் நடந்தது என்ன?

பாகிஸ்தான் கொடிகள் இறக்கப்பட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

ஆகஸ்ட் 14 பாகிஸ்தானும், ஆகஸ்ட் 15 இந்தியாவும் தனது சுதந்திர தினத்தை கொண்டாடியது. இரு நாடுகளுக்கும் இது 80வது சுதந்திர தினம். 1947 தேசப் பிரிவினையால் இந்தியா - பாகிஸ்தான் பிரிந்ததன் பின்னணியில் இந்த தேதி வித்தியாசம்.

ஆனால் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள சில நகரங்கள் மட்டும் வருடந்தோறும் தாமதமாகவே சுதந்திர இந்தியாவில் இணைந்ததை கொண்டாடுகின்றன.

ஏன்?

சர் சிரில் ராட்கிளிப் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோடுகளை வரையறுத்தார்.

ஒருங்கிணைந்த வங்காளமும் இந்த பிரிவினையால் துண்டாடப்பட்டது. கிழக்கில் இந்தியாவுக்குள் இருக்கும் வங்கம் மேற்கு வாங்கமாகவும், மறுபுறம் பாகிஸ்தானுக்கு சொந்தமானது கிழக்கு பாகிஸ்தானாகவும் பிரிக்கப்பட்டது.

குழப்பம்

மேற்கு வங்கத்தின் நாடியா, மால்டா மற்றும் தினாஜ்பூர் (இப்போதைய பெயர்கள்) ஆகிய நகரங்களின் பெரும் பகுதிகள் தாங்கள் இந்தியாவுக்குள் வருகிறோமா அல்லது கிழக்கு பாகிஸ்தானுக்குள் வருகிறோமா என்பது தெரியாமல் குழம்பின.

எல்லைக்கோடுகள் எங்கு பிரிக்கப்பட்டுள்ளன என்பது அதிகாரப்பூர்வமாக தெரியாததால், அப்பகுதிகள் கிழக்கு பாகிஸ்தானுடன் இணையக்கூடும் என கருதப்பட்டது. அங்கு 1947 சுதந்திரத்தின்போது பாகிஸ்தான் கொடிகளே ஏற்றப்பட்டன.

1947, ஆகஸ்ட் 17 மாலை வரை இந்தப் பகுதிகள் எந்த நாட்டிற்கு சொந்தம் என்பதில் பெரும் குழப்பம் நிலவியது.

கொடியேற்றம்

அன்றைய தினம் இரவு ஆல் இந்தியா ரேடியோவில், சர் சிரில் ராட்கிளிப் தயாரித்த எல்லைப் வரையறை அறிக்கை வாசிக்கப்பட்டபோது தான், அவை இந்தியாவுக்குள் வருவது தெரியவந்தது.

நாடியாவின் ஆகிய மெஹெர்பூர், சுவாடங்கா, குஷ்டியா3 உட்பிரிவுகள் மட்டுமே கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்றன.

இதனைத் தொடர்ந்து, 1947, ஆகஸ்ட் 18 மதியம், அதாவது இந்தியாவின் பிற பகுதிகள் சுதந்திரம் அடைந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, அப்பகுதிகளில் பறந்த பாகிஸ்தான் கொடிகள் இறக்கப்பட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

இன்றும் இந்த பகுதிகளில் ஆகஸ்ட் 18ஆம் தேதி, 'பாரத் புக்தி திவாஸ்' (பாரதத்துடன் சேர்ந்த நாள்) என்ற பெயரில் சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது.

கட்டுக்கதை

சர் ராட்க்ளிப் தவறுதலாக இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளை கிழக்கு பாகிஸ்தானுக்கு ஒதுக்கி வரைபடம் வரைந்ததாகவும் அதை அறிந்த வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு, உடனடியாக வரைபடத்தை திருத்தி வரைய உத்தரவிட்டதால் தான் அறிவிப்பு தாமதமானதாகவும் ஒரு கதை கூறப்படுகிறது. ஆனால் அது பொய்யானது என வரலாற்றாய்வாளர்கள் மறுக்கின்றனர்.

தாமதம் ஏன்?

ராட்கிளிப் தனது எல்லைப் வரையறை அறிக்கையை வைஸ்ராய் மவுண்ட் பேட்டனிடம் ஆகஸ்ட் 12லேயே கையெழுத்திட்டு சமர்ப்பித்துவிட்டார்.

எல்லைப் பகிர்வை சுதந்திரத்திற்கு முன்பே அறிவித்தால் ஏற்கனவே நடந்து வந்த மதக் கலவரம் தீவிரமடையும் என மவுண்ட் பேட்டன் கருதினார்.

இதனால் ராட்கிளிப் அறிக்கை ஆகஸ்ட் 17 அன்று 'தி கெஸட் ஆப் இந்தியா எக்ஸ்ட்ராஆர்டினரி' இதழில் வெளியிடப்படும் வரை ரகசியமாக வைக்கப்பட்டது.

எல்லை குறித்த தகவல்கள் இல்லாத அந்த 3 நாட்களில் முஸ்லிம் லீக் தொண்டர்கள் பல இடங்களில் பாகிஸ்தான் கொடிகளை ஏற்றினர். ஆகஸ்ட் 17 இந்தியா ரேடியோவில் அறிவிக்கப்பட்ட பின் தெளிவு ஏற்பட்டு ஆகஸ்ட் 18 இந்திய கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.