இந்தியா

ஜப்பான் பிரதமரை இளையசகோதரி என வரவேற்ற பிரதமர் மோடி!

இருநாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பத்திரிக்கை அறிக்கைகளும் பரிமாறப்பட்டன.

ஜப்பான் பிரதமர் சனே டகாயிச்சி, தனது முதல் இந்தியப் பயணமாக புதுடெல்லி வந்தடைந்தார். சனே டகாயிச்சிக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் அங்குள்ள ஹைதராபாத் இல்லத்திற்குச் சென்றார். மேலும் அங்கு பிரதமர் மோடியுடன் இருதரப்பு சந்திப்பில் பங்கேற்றார். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பத்திரிக்கை அறிக்கைகளும் பரிமாறப்பட்டன.

பிற்பகல் 3 மணிக்கு தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற வருடாந்திர இந்தியா-ஜப்பான் வர்த்தக மன்றத்தில் ஜப்பான் பிரதமர் டகாய்ச்சி உரையாற்றினார்.

இருதரப்புப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஜப்பானியப் பிரதமர் சனே டகாயிச்சியுடன் இணைந்து பிரதமர் மோடி தகவல்களை வெளியிட்டார். அப்போது பேசிய பிரதமர், இரு நாடுகளின் நிதிச் சேவை முகமைகளுக்கு இடையே புதிதாகக் கையெழுத்தான இந்த ஒப்பந்தம், மூலதனம் மற்றும் முதலீடுகளின் பங்கீடுகளை மேலும் எளிதாக்கும் என்று கூறினார்.

வரவேற்புரையில் பேசிய பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் டகாயிச்சியை "தனது தங்கை" என கூறி அன்புடன் வரவேற்றார். பின்னர், ஜப்பானிய தூதுக்-குழுவினர், பிரமுகர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக டகாயிச்சி மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணத்தை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகக் தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி, இதுகுறித்த காணொளிகளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT