இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சங்களை எட்டி வருகிறது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது:-
* 2025-2026 நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி, ரூ.1.78 லட்சம் கோடியாக வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
* மேலும் முந்தைய நிதியாண்டின் உற்பத்தியான ரூ.1.54 லட்சம் கோடியை விட 15.6 சதவீதம் வளர்ச்சியை குறிக்கிறது.
* மேலும் 2020-2021-ல் ரூ.84,643 கோடியாக இருந்ததை விட தற்போதைய உற்பத்தி எண்ணிக்கை 110 சதவீதம் அதிகரித்துள்ளது.
* 2013-2014 நிதியாண்டில் ரூ. 43,746 கோடியாக இருந்த உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி, தற்போது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
* மேலும் 2025-2026 ஆம் ஆண்டில் தனியார் துறையின் பங்கும் சுமார் ரூ. 42,000 கோடியாக, இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது.
* சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி, பாதுகாப்பு உற்பத்தித் துறை மற்றும் பிற அனைத்துத் தரப்பினரின் கூட்டு முயற்சிகளின் விளைவாகும்.
* இந்த வளர்ச்சிப் பாதை, நாட்டின் விரிவடைந்து வரும் பாதுகாப்புத் தொழில் தளத்தின் தெளிவான அறிகுறியாகும் என்று கூறினார்.