இந்தியா

ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் புதிய நோட்டீஸ் - எதிர்க்கட்சிகள் முடிவு?

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் நடுநிலைமை குறித்து எதிர்க்கட்சிகள் நீண்டகாலமாக அதிருப்தி தெரிவித்து வருகின்றன.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய கோரி எதிர்க்கட்சிகள் விடுத்த முந்தைய தீர்மான நோட்டீஸ் பாராளுமன்ற இரு அவைகளிலும் அவைத் தலைவர்களால் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில் ஞானேஷ் குமாரை பதவிநீக்க கோரி மீண்டும் தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் நடுநிலைமை குறித்து எதிர்க்கட்சிகள் நீண்டகாலமாக அதிருப்தி தெரிவித்து வருகின்றன.

பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த குளறுபடி, வாக்கு திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஞானேஷ் குமார் மீது எதிர்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து சுமத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் எதிர்க்கட்சிகள் புதிய தீர்மான நோட்டீஸ் விடுக்க முடிவெடுத்துள்ளது.