இந்தியா

இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கூட்டணி முறிவால் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேஜஸ்வி, உமர் அப்துல்லா, திருமாவளவன், சுப்ரியா சுலே ஆகியோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கூட்டணி முறிவால் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக ஏற்கனவே அறிவித்து விட்டது.

இந்தியா கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தவெகவுக்கு அழைப்பில்லை. எம்பிக்களைப் பெற்றிருக்கும் கட்சிகளுக்கு மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு என காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்த கூட்டங்களில் தவெகவை அழைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் அடுத்த மாதம் தொடங்​கும் நிலையில் அதில் முன்வைக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

தொகுதி மறுவரையறைக்கான பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா கடந்த கூட்டத்தொடரில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முயற்சியால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் நடப்பு கூட்டத் தொடரில் மீண்டும் தாக்கல் செய்ய பாஜக அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இன்றைய கூட்டத்தில் விவாதம் நடைபெறும்.