பண்டிகை காலம் வரவிருப்பதால் அக்டோபர் 31-ந்தேதி வரை சர்க்கரை இறக்குமதிக்கு வரி விதிக்கப்படாது என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வெகுவாக குறைந்த நிலையில், சர்க்கரை விலை கடந்த இரண்டு மாதங்களில் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. வரும் மாதங்களில் பல்வேறு பண்டிகை வர இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு அக்டோபர் 31-ந்தேதி ஒரு லட்சம் டன் சர்க்கரை இறக்குமதி செய்ய வரி தளர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வர்த்தக அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விலை உயர்ந்து வருவதை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா இறக்குமதி செய்ய இருக்கும் நிலையில், லண்டன் மற்றும் நியூயார்க்கில் அடிப்படை விலையில் உயர்வு ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.