இந்தியா

இந்தியா கூட்டணி பேரணியை தள்ளி வைக்க வேண்டும் - ராகுல்காந்தியிடம் வர்த்தக அமைப்பு வலியுறுத்தல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வணிகம் உச்சத்தில் இருக்கும். ஒரு வாரத்திற்கு முன்பே வணிகம் அதிக அளவில் இருக்கும் - பியூஷ் கோயல்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அதற்கு எதிராகவும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரியும் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி தீவிரமாக களம் இறங்கி உள்ளது.

நவம்பர் 1-ந்தேதி போராட்டம்

டெல்லியில் இந்தியா கூட்டணியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே வாக்கு திருட்டுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த காங்கிரஸ் முடிவு செய்தது. அதன்படி நவம்பர் 1-ந்தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபடுகிறது.

ராகுல்காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கண்டன கூட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதே போல மாணவ அமைப்புகளும், பல்வேறு சமூக பிரதிநிதிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேரணிக்கு டெல்லி போலீஸ் அனுமதி அளித்தது.

பியூஷ் கோயல் - கடிதம்

இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று வர்த்தக அமைப்பு வலியுறுத்தியுள்ளது. நவம்பர் 1-ந்தேதி இந்தியா கூட்டணியின் பேரணி நடைபெற்றால் தங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ராகுல்காந்திக்கு வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பு தலைவர் பியூஷ் கோயல் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வணிகம் உச்சத்தில் இருக்கும். பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே வணிகம் அதிக அளவில் இருக்கும்.

இந்தியா கூட்டணி போராட்டம்

இந்த நேரத்தில் ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடைபெற்றால் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான வணிக நடவடிக்கைகள் பாதிக்கக்கூடும். மொத்த மற்றும் சில்லரை வணிக சந்தையில் இந்த பேரணி பாதிப்பை ஏற்படுத்தும்.

வாடிக்கையாளர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில் இந்த போராட்டம் எங்களுக்கு கவலை அளிக்கிறது. இதனால் நவம்பர் 1-ந்தேதி நடைபெற இருக்கும் இந்தியா கூட்டணியின் போராட்டத்தை நவம்பர் 10-ந்தேதிக்கு பிறகு தள்ளி வைக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வணிக சந்தைகள்

ராம்லீலா மைதானத்தை சுற்றி உள்ள 5 கி.மீட்டரில் சுமார் 20 மொத்தம் சில்லரை வணிக சந்தைகள் உள்ளன. இதில் சாந்தினி சவுக், சதார் பஜார், சாவுனி பஜார், கரோல் பாக், ஆசாத் மல்கட் உள்ளிட்ட பகுதிகள் அடங் கும் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்களால் அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.3 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்ததாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT