இந்தியா

ஜூன் 1 முதல் உள்நாட்டு விமான சேவையை கணிசமாக குறைக்க இண்டிகோ, ஏர் இந்தியா முடிவு

விமானக் கட்டணங்கள் கணிசமாக உயரக்கூடும்

இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவையில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே சுமார் 90 சதவீத பங்கு வகிக்கின்றன.

இந்நிலையில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகியவை ஜூன் 1 முதல் 90 நாட்களுக்குத் தங்களது உள்நாட்டு விமானச் சேவைகளைக் கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளன.

விமான எரிபொருளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாலும், கோடைகாலத்தின் இறுதிப் பகுதியில் பயணிகளுக்கான தேவை குறைந்துள்ளதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

முதற்கட்ட தகவலின்படி, ஏர் இந்தியா நிறுவனம் தனது ஒட்டுமொத்த உள்நாட்டு விமானச் சேவைகளில் 15 சதவீதத்தையும், இண்டிகோ நிறுவனம் 5 முதல் 7 சதவீதம் வரையிலான சேவைகளையும் தற்காலிகமாகக் குறைக்கவுள்ளன.

இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டு முடிவால் விமானக் கட்டணங்கள் கணிசமாக உயரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT