முகமது சிராஜ்
இந்தியா

கடைசி ஒருநாள்: இந்திய அணியில் சிராஜ், யாஷ் தாகூர்- ரோகித் சர்மா ஏமாற்றம்

ரோகித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு போட்டிகளில் இந்தியா முதல் 2-ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 4-வது போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து பந்து வீச்சு

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி மவுண்ட் மவுங்கானுய் என்ற இடத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

முகமது சிராஜ்

இந்த அணியில் முகமது சிராஜ், யாஷ் தாகூர் சேர்க்கப்பட்டனர். ரோகித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ரோகித் சர்மா அவுட்

ரோகித் சர்மாவுக்கு இந்த போட்டியும் ஏமாற்றமாக அமைந்தது. 13 பந்துகளை சந்தித்த அவர் 7 ரன்கள் எடுத்து பிஷர் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 5.3 ஓவர்களில் 23 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து ருதுராஜ் கெய்க்வாட் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் விளையாடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT