இந்தியா

ரூ.20 லஞ்சம்.. 30 ஆண்டு கழித்து நிரபராதி என வந்த தீர்ப்பு.. அடுத்த நாளே மரணித்த முன்னாள் காவலர்

30 ஆண்டுகள் சட்டப் போராட்டத்தில் அவர் தனது வாழ்நாளைக் கழித்தார்.தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற கூற்றுக்கு பாபுபாய் பிரஜாபதி உதாரணமாகியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த முன்னாள் போலீஸ் கான்ஸ்டபிள் அதிகாரி பாபுபாய் பிரஜாபதி (64).

1996-ஆம் ஆண்டு, லாரி ஓட்டுநர் ஒருவரிடம் 20 ரூபாய் லஞ்சம் வாங்கியதாகக் பாபுபாய் பிரஜாபதி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது. விசாரணைக்கு பின் 2004 ஆம் ஆண்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

4 ஆண்டுகள் கடந்து விடுதலை ஆன போதும் தன் மீதான களங்கத்தை துடைக்க அவர் செய்த மேல்முறையீடு மேல்முறையீடு குஜராத் உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் சட்டப் போராட்டத்தில் அவர் தனது வாழ்நாளைக் கழித்தார்.

கடந்த புதன்கிழமை, குஜராத் உயர் நீதிமன்றம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவரை நிரபராதி என அறிவித்து வழக்கிலிருந்து விடுவித்தது. ஆனால் தீர்ப்பு வந்த மறுநாளே (வியாழக்கிழமை) அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற கூற்றுக்கு பாபுபாய் பிரஜாபதியின் நிலை மற்றொரு உதாரணமாக மாறியுள்ளது. 

SCROLL FOR NEXT