இந்தியா

ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டு வரப்பட்டால் முறைப்படி பரிசீலிக்கப்படும் - ஓம் பிர்லா!

எதிர்க்கட்சிகள் இதற்கு முன்னர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்க இரண்டு முறை முயற்சி செய்துள்ளன.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக, எதிர்க்கட்சிகள் ஏதேனும் புதிய பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டுவந்தால், அது நாடாளுமன்ற விதிகள் மற்றும் உரிய நடைமுறைகளின்படியே பரிசீலிக்கப்படும் என்று மக்களவைச் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளில் (SIR) நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஓம் பிர்லாவின் இந்தக் கருத்து வந்துள்ளது.

இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;

“தீர்மானம் கொண்டுவரப்படும்போது நாங்கள் அதற்கான செயல்முறையைப் பின்பற்றுவோம். நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்வதற்கு ஒரு நடைமுறை இருப்பது போலவே, தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் ஒரு செயல்முறை வகுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தால் அது முறையாக பின்பற்றப்படும்.” என தெரிவித்தார்.

முந்தைய முயற்சிகள்

எதிர்க்கட்சிகள் இதற்கு முன்னர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்க இரண்டு முறை முயற்சி செய்துள்ளன.

முதல்முறை அனுப்பப்பட்ட நோட்டீஸ், மக்களவை மற்றும் இரண்டிலும் நிராகரிக்கப்பட்டது. இரண்டாவது முயற்சியின் போது தாக்கல் செய்யப்பட்ட நோட்டீஸ்கள் தற்போது மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளன.

சட்டத்தின்படி, உச்ச நீதிமன்ற நீதிபதியின் பதவிநீக்க நடவடிக்கையைப் போன்ற ஒரு செயல்முறையின் மூலம் நாடாளுமன்றத்தால் தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க முடியும்.

SCROLL FOR NEXT