இந்தியா

கையால் ஜிலேபி சுடுவதே எனக்கு பிடிக்கும்: வீடியோவை பகிர்ந்து ஆனந்த் மஹிந்திரா கருத்து

எனக்கு மிகவும் பிடித்த ஜிலேபியை, கையால் மாவு பிழிந்து சுடுவது ஒருவித சிறப்பான கலை என்று நான் நினைக்கிறேன்ஒருவேளை நான் பழமையை விரும்பும் அந்த காலத்து மனிதராக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது

3டி பிரிண்டர் முறையில் ஜிலேபி தயாரிக்கும் வீடியோவை தனது X பக்கத்தில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.

அதில், "புதிய தொழிட்நுட்பங்களை எப்போதும் ஆதரிப்பவன் நான். ஆனாலும் 3டி பிரிண்டர் முறையில் ஜிலேபி தயாரிக்கும் இந்த வீடியோவை பார்க்கையில், எனக்குள் பலவித உணர்வுகள் தோன்றுகின்றன. எனக்கு மிகவும் பிடித்த ஜிலேபியை, கையால் மாவு பிழிந்து சுடுவது ஒருவித சிறப்பான கலை என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், "ஒருவேளை நான் பழமையை விரும்பும் அந்த காலத்து மனிதராக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.