பிரதமர் மோடியுடன் பெங்களூரு மெட்ரோவில் பயணம் செய்தபோது தனக்கு ஏற்பட்ட ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் மோடி நேற்று முன் தினம் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வருகை தந்தார். அங்கு முதல்வர் டி.கே. சிவகுமாருடன் பெங்களூரு மெட்ரோவின் புதிய பிங்க் லைனை தொடங்கி வைத்தார்.
தொடங்கி வைத்த கையேடு இருவரும் கலேனா அக்ரஹாராவிலிருந்து எஸ்.ஜி. பாலாவிற்கு மெட்ரோவில் பயணித்தனர்.
இந்நிலையில் இந்த பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், பிரதமருடன் நடந்த அந்த உரையாடலை நினைவு கூர்ந்தார்.
"என் கையில் பணம் இல்லை. அதனால், எனக்கு சேர்த்து டிக்கெட் எடுங்கள் என்று அவரிடம் சொன்னேன். அவரும் எனக்காக தன் கார்டை ஸ்வைப் செய்து டிக்கெட் பெற்றார்" என்றார் சிவகுமார் தெரிவித்தார்.
மேலும் அரசியல் வேறுபாடுகள் வளர்ச்சி முயற்சிகளுக்கு தடையாக இருக்கக்கூடாது என்றும், அரசியல் என்பது தேர்தல்களுக்குள் மட்டுமே சுருங்கிவிட வேண்டும் என்றும் சிவகுமார் தெரிவித்தார்.
"நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். தேர்தல் வரும்போது அரசியல் பற்றிப் பேசலாம்.
வளர்ச்சிக்கும் அரசியலுக்கும் இடையே வேறுபாடு இருக்க வேண்டாமா? நாட்டில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்று பிரதமரும் விரும்புகிறார்" என்று அவர் கூறினார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரதமருடன் தனக்கு தனிப்பட்ட நெருக்கமும் பரஸ்பர மரியாதையும் இருப்பதாக சிவகுமார் கூறினார்.
நாட்டிலுள்ள மாநிலங்களில், வரி மற்றும் ஜிஎஸ்டி பங்களிப்பில் கர்நாடகா இரண்டாவது இடத்தில் இருப்பதாக அவர் கூறினார்.
நேற்று முன் தினம் பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட 7.5 கி.மீ நீளமுள்ள பிங்க் லைன், கலேனா அக்ரஹாரா மற்றும் தாவரகெரேயை இணைக்கிறது.
நேற்று மீண்டும் மெட்ரோவில் பயணம் செய்த முதலமைச்சர், பயணிகளுடன் கலந்துரையாடி, புதிய வழித்தடம் குறித்த அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். மேலும், ரெயிலை இயக்கிய பெண் ஓட்டுனருடமும் அவர் பேசினார்.