பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான உ.பி.யில் உள்ள வாரணாசிக்கு இன்று சென்றிருந்தார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
* 'மகா யாகம் (maha yagya)' தொடங்குவதற்குப் பெண்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்.
* தேசிய நலன் சார்ந்த ஒரு முக்கிய இலக்கை (மக்களவை, மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துதல்) அடைய உங்கள் ஆசீர்வாதங்கள் தேவை.
* சமாஜ்வாடி, காங்கிரஸ் போன்ற கட்சிகளால் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன
* எனது சகோதரிகளுக்கு நான் உறுதியளிக்கிறேன், உங்களின் இட ஒதுக்கீட்டு உரிமை செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்யாமல் ஓயமாட்டேன்.
* உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சிக் காலத்தில் மகள்கள் வீட்டை விட்டு வெளியே வருவது கடினமாக இருந்தது
* காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் மீண்டும் ஒருமுறை பெண்களுக்குத் துரோகம் செய்துள்ளன
* இந்த வம்சாவளி அரசியல் கட்சிகள், மகள்கள் சட்டமன்றங்களுக்கும் மக்களவைக்கும் வருவதை விரும்புவதில்லை.
* இந்தக் கட்சிகள் 40 ஆண்டுகளாக மகளிர் இட ஒதுக்கீட்டிற்குத் தடை விதித்துள்ளன.