இந்தியா

ஹைதராபாத் பெண் என்ஜினீயர் அமெரிக்காவில் சடலமாக மீட்பு..

புளோரிடாவில் தோழியின் திருமண விழாவிற்கு சென்ற ஸ்ரீவீணா வயது (28) நீச்சல்குளத்தில் பிணமாக மீட்பு.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நியூ சிவபுரி காலனியை சேர்ந்தவர் ஸ்ரீவீணா வயது (28) நீச்சல்குளத்தில் பிணமாக மீட்பு.

இவர் அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் சாப்ட் வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த பிரசாந்த் ரெட்டி என்பவருக்கும் ஸ்ரீவீணா என்பவருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு இருவருக்கும் பெற்றோர்கள் மத்தியில் திருமணம் நடந்தது. இல்லறவாழ்க்கையும் நல்லபடியாக நடந்து வந்தது.

இந்நிலையில் ஸ்ரீவீணா 2 நாட்களுக்கு முன்பு தனது தோழியின் திருமண விழா புளோரிடாவில் நடைபெற இருப்பதால் கணவரிடம் கேட்டு திருமணத்திற்கு சென்றார்.

அங்கு அனைவரும் ஸ்ரீவீணாவை நீண்ட நேரமாக காணவில்லையென அங்கு வந்த நண்பர்கள் உட்பட்டோர் தேடுகையில் நீச்சல்குளத்தில் மர்மான முறையில் கிடைப்பதைக் கண்ட நண்பர்கள் உடனே போலீசாருக்கும், ஸ்ரீவீணாவின் குடும்பத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் வந்து ஸ்ரீவீணாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து பார்க்கையில் அவர் இறந்து நீண்ட நேரம் ஆகிவிட்டது என்று தெரிவித்தனர்.

பெற்றோர்கள் வந்தபோது தனது மகளுக்கு நன்றாகவே நீச்சல் தெரியும் என்பதை கூறும்போது, அனைவரும் ஷாக் ஆனநிலையில் அவரது மரணத்தில் மர்மம் ஏதோ இருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

அவரது பெற்றோர்களும், கணவரும் கதறி அழுதனர். ஸ்ரீவீணாவின் உடலை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல நான் உயரதிகாரர்களிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன் என எல்.பி.நகர் எம்.எல்.ஏ. நேரில் சென்று அவர்களுக்கு ஆதரவு கூறினார்.