இந்தியா

ஐதராபாத்தில் தலை ஒட்டி பிறந்த சகோதரிகள் வங்கி தேர்வு எழுதுவதில் சிக்கல்

ஐதராபாத்தை சேர்ந்த தலை ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் கடந்த ஆண்டு பி.காம் வணிக பகுப்பாய்வுப் படிப்பை சிறப்புத் தகுதியுடன் முடித்தனர்.

பாரத ஸ்டேட் வங்கியின் பயிற்சி அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பித்துள்ள தலை ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு ஒரே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அறைகள் வேறு ஒதுக்கப்பட்டுள்ளன.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் வீணா, வாணி. தலை ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள். இவர்கள் அமீர்பேட்டை அருகே உள்ள சிசு விஹார் என்ற அரசு இல்லத்தில் வசித்து வருகின்றனர்.

அவர்கள் கடந்த ஆண்டு பி.காம் வணிகப் பகுப்பாய்வுப் படிப்பை சிறப்புத் தகுதியுடன் முடித்தனர்.

தற்போது பாரத ஸ்டேட் வங்கியின் பயிற்சி அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 1-ந்தேதி நடைபெற உள்ளது. அவர்கள் தங்களது தேர்வு நுழைவுச் சீட்டுகளையும் பெற்றுள்ளனர்.

அவர்கள் அப்துல்லாபூர்மெட்டில் உள்ள டி.சி.எஸ் அயான் டிஜிட்டல் மையத்தில் தேர்வு எழுத வேண்டும். அவர்களுக்கு ஒரே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அறைகள் வெவ்வேறாக ஒதுக்கப்பட்டுள்ளன.

தலை ஒட்டி உள்ளதால் அவர்களால் தனித்தனியாக அமர்ந்து தேர்வு எழுத முடியாது. எனவே ஒரே அறையில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT