இந்தியா

ஐதராபாத்: கல்லூரியில் தாண்டியா நிகழ்ச்சியின்போது விபத்து.. மாணவி பலி - 14 பேர் படுகாயம்

அலங்கரிக்கப்பட்ட இரும்பு வளைவு ஒன்று சரிந்து விழுந்தது.

ஐதராபாத்தில் பொறியியல் கல்லூரியில் தாண்டியா நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட விபத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நாடர்குல்லில் உள்ள எம்.வி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் இந்த விபத்து நிகழ்ந்தது.

தசராவை முன்னிட்டு இரவில் தாண்டியா நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இரும்பு வளைவு ஒன்று சரிந்து விழுந்தது.

உயிரிழப்பு

இந்த விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர், வனபர்த்தியைச் சேர்ந்த சோனி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கவலைக்கிடம்

சோனியின் சகோதரியும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். மேலும் காயமடைந்தவர்களில் மேலும் ஐந்து பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

அவர்கள் சிகிச்சைக்காக எல்.பி. நகரில் உள்ள காமினேனி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT