உத்தரகாண்டில் தனது மனைவியுடன் பைக்கில் சென்ற கணவர் ஒருவர், காவல்துறையினரின் சோதனையை தவிர்ப்பதற்காக பைக்கை வேகமாக திருப்பிய போது, பைக்கில் இருந்த பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
உத்தரகாண்ட்டில் உள்ள ருத்ராபூர் நகரில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களை மறித்து காவலர்கள் அபராதம் விதித்து வந்தனர்.
இந்த நிலையில் காவலர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, தனது மனைவியுடன் பைக்கில் வந்த நபர் ஒருவர் காவலர்களை பார்த்தவுடன் வேகமாக சென்றார்.
அப்போது பைக்கில் இருந்த நபரின் மனைவி நிலை தடுமாறி தரையில் விழுந்தார்.
இதையடுத்து சாலையில் விழுந்த இளம்பெண்ணை உடனடியாக காவலர்கள் தூக்கினர்.
இந்த சம்பவத்தில் இளம்பெண்ணுக்கு காயம் எதுவும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தனது மனைவி பைக்கில் இருந்து கீழே விழுந்த பிறகும், கணவர் பைக்கை நிறுத்தாமல் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
இதையடுத்து அந்த கணவருக்கு கண்டனம் தெரிவித்த நெட்டிசன்கள், மனைவி கீழே விழுந்தும் நிற்காமல் செல்வதாக பதிவிட்டனர்.