இந்தியா

2 வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்த பெண் டாக்டரை சரமாரியாக தாக்கிய கணவர்- வீடியோ வைரல்

அதே நேரம் இருவரும் விவாகரத்து செய்யாமலேயே கடந்த ஓரு ஆண்டாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.பெண்ணுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது.

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் கசன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த இளம் டாக்டர் தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அவர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அடிக்கடி இருவரும் சண்டை போட்ட நிலையில், இருவரும் பிரிந்தனர். அதே நேரம் இருவரும் விவாகரத்து செய்யாமலேயே கடந்த ஓரு ஆண்டாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அந்த பெண் தனது 2 ஆண் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று உள்ளார். அங்கு அறை எடுத்து தங்கிய அவர் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த அந்த பெண்ணின் கணவரான டாக்டர் நேராக அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு ஓட்டல் ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி, தனது மனைவி தங்கி இருந்த அறையின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.

அப்போது மனைவி இரண்டு ஆண்களுடன் நெருக்கமாக இருப்பதை கண்ட அவர் ஆவேசம் அடைந்து மனைவியை கடுமையாக அடித்து உதைத்து தாக்கி உள்ளார். இதைப்பார்த்த அந்த பெண், ஆண் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் டாக்டர் மற்றும் பெண் டாக்டர், அவரது ஆண் நண்பர்கள் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பெண் டாக்டருடன் நெருக்கமாக இருந்தது காஜியாபாத் மற்றும் புலந்த் சாகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதற்கிடையே பெண் டாக்டரை அவரது கணவர் சரமாரியாக தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.