உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் 28 மேலவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை எனத் தெரிகிறது. குறிப்பாக கர்நாடகாவில் 4 இடங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இந்த தோல்வி காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியிலான பலத்தை கேள்வி எழுப்பியுள்ளது. காங்கிரஸ் 28 இடங்களில் 12-ல் வெற்றி பெற்றது.
எம்.எல்.சி. தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், பிரதமர் மோடி தற்போது வாக்குச்சீட்டு முறையில் எம்.எல்.சி. தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்பதை யூகித்து பாருங்கள் என, அக்கட்சியை கிண்டல் செய்யும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன் சேர்ந்து பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேலும், வாக்கு எந்திரம் மூலம் முறைகேடு நடைபெறுகிறது. இதனால் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று வலியுத்தி வருகிறார். இந்த நிலையில்தான் வாக்குச்சீட்டு மூலம் நடத்தப்பட்ட தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.