மணிப்பூரில் கொல்லப்பட்ட நாகா இனத்தவரின் தலையை திருப்பி தருமாறு நாகா அமைப்பு கெடு விதித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் நாகா சமூகத்தினருக்கு இடையே மோதல் நடந்து வருகிறது. கடந்த 2023 இல் ஏற்பட்ட இனக்கலவரத்தில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதன்பின் வன்முறை தொடர்ந்ததால் 2025 பிப்ரவரியில் பாஜக அரசு கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. தொடந்து இந்த ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் பாஜக அரசு அமைத்தது.
அண்மை காலமாக மீண்டும் அங்கு மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பிலும் ஆயுத குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே காங்போக்பி மாவட்டத்தின் மகுய் அஷாங் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த தாக்குதலில், அஜின்பாவ் ஆர் என அடையாளம் காணப்பட்ட 52 வயது நாகா இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கொல்லப்பட்டார்.
சடலத்தின் தலை காணாமல் போயிருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு, பிரேதப் பரிசோதனைக்காக அந்தச் சடலம் இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
தலை துண்டிக்கப்பட்ட சடலத்தைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. அஜின்போவின் தலை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் நாகா இனத்தவர் ஒருவரை கொலை செய்து அவரின் தலையை குக்கி கிளர்ச்சியாளர்கள் துண்டித்து கையோடு எடுத்துச் சென்றுள்ளனர்.
கொல்லப்பட்ட நபரின் துண்டிக்கப்பட்ட தலையைத் திருப்பித் தருமாறு கோரி, நாகா அமைப்பான மணிப்பூர் கூட்டுப் பழங்குடியினர் சபை 48 மணி நேர கெடு விதித்துள்ளது.
தலை துண்டிக்கப்பட்ட உடலுக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்கப்படாது என்று அவர்கள் எச்சரித்தனர்.
உடலை வைத்து செய்யப்படும் எந்தவிதமான அநாகரிகச் செயலும் பொறுத்துக்கொள்ளப்படாது என்றும், நீதியை நிலைநாட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
மணிப்பூரில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையன்று காம்ஜோங், உக்ருல் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர்.
நாகாக்கள் ஆதிக்கம் செலுத்தும் காம்ஜோங்கின் குகி பகுதியிலுள்ள சசாத் கிராமத்தில் 22 வயதுப் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் வன்முறை தீவிரம் அடைந்துள்ளது.