இந்தியா

நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதி கோர விபத்து - 13 பேர் உயிரிழப்பு | Bihar

மேலும் சுமார் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

பீகார் மாநிலம் கட்டிகார் மாவட்டத்தின் கோதா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் 6:30 மணியளவில் அவ்வழியே சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து டிரக் மற்றும் பிக் அப் வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்து நடந்த இடத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 13 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் சுமார் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பூர்ணியா மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 அறிவித்துள்ளார்.