உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் இருந்து டோராடூன் நோக்கி சென்ற ஹெலிகாப்டர், சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் அருகே விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த விமானத்தில் ஒரு விமானி உட்பட ஆறு பேர் இருந்ததாகவும், மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சார்லி எக்ஸ்-ரே நிறுவனத்தால் இயக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர், ஹாத்தி பர்வதம் அருகே காணாமல் போனதாகத் தகவல் வெளியானதை அடுத்து, அதைக் கண்டுபிடிப்பதற்காக மேலும் இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளனர்.
நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி விபத்து குறித்து உறுதிப்படுத்தியுள்ளார். சம்பவத்தை தான் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.