தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையால் திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக கடந்த 3 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருப்பதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையினால் குளிர்ந்த காற்று வீசுகிறது. தரிசனத்திற்கு வந்த குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மழையில் நனைந்து குளிரில் நடுங்கியபடி தரிசனம் செய்தனர். அதிக அளவில் பக்தர்கள் வந்துள்ளதால் தங்கும் விடுதி கிடைக்காமல் அவதி அடைந்தனர்.
திருப்பதியில் நேற்று 76,343 பேர் தரிசனம் செய்தனர். 18,768 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.34 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.