இந்தியா

"அவர் வலிமையாக இருக்கிறார்.."- சிறையில் கெஜ்ரிவாலை சந்தித்த அமைச்சர் சவுரப் பரத்வாஜ்

சிறையில் இருந்தபடியே தனது பணியை கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார்.அரவிந்த் கெஜ்ரிவாலை திகாரில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பதிவியில் இருந்து விலகாத நிலையில், சிறையில் இருந்தபடியே தனது பணியை கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், டெல்லி கேபினட் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது, "மக்கள் அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.

அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் சந்தித்ததாகவும், அவருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், "அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் நான் அரை மணி நேரம் சந்தித்தேன். அப்போது, "மக்கள் தன்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று அவர் கூறினார். "அவர் வலிமையானவர்" என்றும் "டெல்லி மக்களின் ஆசீர்வாதத்துடன் தனது போராட்டத்தை தொடருவேன்" என்றும் அவர் கூறினார். 

SCROLL FOR NEXT