செல்போன்
இந்தியா

24 மணி நேரமும் செல்போனில் நேரத்தை வீணடித்த நபர்: Brain Stacking மூலம் மீண்டது எப்படி?

நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்போனை பயன்படுத்தி வந்தார்.

ஸ்மார்ட்போனில் தொடர்ந்து சமூக வலைதளங்களைப் பார்ப்பது, ரீல்ஸ் மற்றும் குறும்பட வீடியோக்களை ஸ்க்ரோல் செய்வது என நேரத்தைச் செலவிட்டு வந்த 32 வயது இளைஞர் ஒருவர், தனது பழக்கத்தை மாற்றிக்கொண்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

ரோஹன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இந்த இளைஞருக்கு, வேலை நேரத்தில் சிறிது இடைவெளி கிடைத்தால் கூட உடனடியாக செல்போனைப் பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது. இது மேலும் அதிகரித்து எப்போதும் செல்போன் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கடுமையான பாதிப்பு

நாளடைவில் இந்தப் பழக்கம் அவரது வேலை மற்றும் கவனிக்கும் திறனைப் பாதித்துள்ளது. மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதுகூட செல்போனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் மனச் சோர்வும் ஏற்பட்டுள்ளது.

இதிலிருந்து மீள்வதற்காக அவர் 'Brain Stacking' என்ற முறையைப் பின்பற்றத் தொடங்கினார்.

இதன்படி, செல்போனை எடுக்கும் ஒவ்வொரு முறையும் அதற்குப் பதிலாக வேறு ஒரு பயனுள்ள செயல்பாட்டைத் தேர்வு செய்தார்.

புத்தகம் படிப்பது

குறுக்கெழுத்துப் புதிர்களைத் தீர்ப்பது. தினமும் 20 நிமிடங்கள் புத்தகம் படிப்பது. டைரி எழுதுவது. ஓவியம் வரைவது. சிறிய கைவினைப் பொருட்களை உருவாக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்தி இருந்தார்.

ஆரம்பத்தில் மீண்டும் செல்போனை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டாலும், தனக்குப் பிடித்தமான செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்தார்.

சில வாரங்களுக்குப் பிறகு, செல்போனை அடிக்கடி பார்க்காமல் புத்தகம் படிப்பதிலும், புதிர்களைத் தீர்ப்பதிலும் கவனம் செலுத்த முடிந்ததாக அவர் தெரிவித்தார்.

Brain Stacking என்றால் என்ன?

மூளைக்கு சிந்தனை, நினைவாற்றல், படைப்பாற்றல் மற்றும் கவனம் தேவைப்படும் பல்வேறு ஆஃப்லைன் செயல்பாடுகளைத் தொடர்ந்து வழங்குவதே இந்த முறையின் அடிப்படையாகும்.

ஸ்மார்ட்போனை முழுமையாகத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒவ்வொரு ஓய்வு நேரத்தையும் செல்போனில் செலவிடாமல், பிற பயனுள்ள பழக்கங்களுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

தொழில்நுட்பத்தை தவிர்ப்பதைவிட அதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே முக்கியம் என்பதை இந்த அனுபவம் உணர்த்துகிறது.

SCROLL FOR NEXT