இந்தியா

VIDEO: 19வது மாடியில் இருந்து பணமழை.. அமலாக்கத்துறை சோதனையில் சினிமா பாணியில் நடந்த சம்பவம்

நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் நிதி முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

அரியானா மாநிலம் கிரேட்டர் மொஹாலி பகுதி மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து 'நில பயன்பாட்டு மாற்றம்' அனுமதி பெறுவதில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் நிதி முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இந்த நில மோசடி மற்றும் பணமோசடி புகார்களின் அடிப்படையில், மொஹாலி மற்றும் சண்டிகரில் உள்ள முக்கிய கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 12-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையிட்டனர்.

அப்போது, மொஹாலியில் அதிகாரிகள் ஒரு கட்டிடத்தின் உள்ளே நுழைந்த போது, அதன் 9வது மாடியிலிருந்து இரண்டு பைகள் கீழே வீசப்பட்டன. அந்தப் பைகளில் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் நிரப்பப்பட்டிருந்தன.

கீழே விழுந்த அந்தப் பைகளிலிருந்து சுமார் 25 லட்சம் ரூபாய் ரொக்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.