இந்தியா

சிங்கத்தை பைக்கில் விரட்டிய வன ஊழியர்கள் டிஸ்மிஸ்

3 ஊழியர்கள் ஜீப் வாகனத்திற்கு பதிலாக இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி உள்ளனர்.

குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள அம்பார்டி சபாரி பூங்காவில் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

அப்போது, சிங்கத்தை அதன் அடைப்பிற்குள் விரட்டிச் செல்ல 3 ஊழியர்கள் ஜீப் வாகனத்திற்கு பதிலாக இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி உள்ளனர்.

சிங்கத்தை வழக்கமான நடைமுறையின்படி பாதுகாப்பாக அழைத்துச் செல்லாமல், பைக்குகளில் துரத்தி சென்றதை சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலாகி வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

விதிகளை மீறிய குற்றத்திற்காக, சம்பந்தப்பட்ட 3 ஒப்பந்த வன ஊழியர்களையும் உடனடியாக பணியில் இருந்து நீக்கி வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT