இந்தியா

குஜராத்: 3 ஆண்டுகளாக சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர் கைது

வீடியோவை வைத்து அவனும் அவனது நண்பர்களும் சிறுமியை கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

குஜராத்தில் 17 வயது சிறுமி 3 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கேதா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த அந்த சிறுமியை கடந்த 2023 ஆம் ஆண்டு பர்வேஸ்கான் பதான் என்ற 23 வயது வாலிபர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதை வீடியோ பதிவு செய்து, தனது நண்பர்களுக்கு காண்பித்துள்ளான்.

அந்த வீடியோவை வைத்து அவனும் அவனது நண்பர்களும் சிறுமியை கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தைரியத்தை வரவழைத்து இறுதியாக பெற்றோரிடம் இதை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பர்வேஸ்கான் பதான் உள்பட 8 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் 19 வயது முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

தலைமறைவாக உள்ள மற்றொருவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT