இந்தியா

குஜராத் : கார் நசுங்கிய விபத்தில் 7 பேர் பலி

மோதலின் வேகம் மிக அதிகமாக இருந்ததால் கார் முழுவதுமாக நசுங்கி இரண்டாக உடைந்தது.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ்-காவ்டா நெடுஞ்சாலையில், கார் ஒரு லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில், மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

கார் நசுங்கி கோர விபத்து

ஒரே குடும்பத்தை சேர்ந்த அவர்கள் கட்ச் பகுதிக்கு சுற்றி பார்த்துவிட்டு நிலையில் இந்த விபத்தானது ஏற்ப்பட்டுள்ளது.லார் மீது மோதிய அதிவேகத்தில் கார் நசுங்கி இரண்டாக பிளந்து விபத்தானது ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலே உயிரிழப்பு

மோதலின் வேகம் மிக அதிகமாக இருந்ததால் கார் முழுவதுமாக நசுங்கி இரண்டாக உடைந்தது. இதில் காரில் பயணித்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்த அனைவரும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், புஜ் பகுதியில் பணியாற்றும் இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் மற்றும் விசாரணை

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து, உருக்குலைந்த காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களைப் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர்

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக புஜ் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தகவலறிந்த ராணுவ அதிகாரிகளும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

ஒன்றரை மாதத்திற்குள் மீண்டும் அதே பகுதியில் மீண்டும் விபத்து ஏற்பட்டிருப்பது பெரும் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT