இந்தியா

ஜனவரியில் ரூ.1.93 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூல்

கடந்த மாதம் உள்நாட்டு ஜி.எஸ்.டி வருவாய் ரூ. 1.41 லட்சம் கோடியாக இருந்தது.மொத்தமாக திரும்பப் பெறும் தொகை 3.1 சதவீதம் குறைந்து ரூ.22,665 கோடியாக இருந்தது.

Maalaimalar

கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல்(சரக்கு மற்றும் சேவை வரி) ரூ.1.93 லட்சம் கோடியை தாண்டியது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.1,82,094 கோடியாக இருந்த ஜி.எஸ்.டி வரி வசூல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6.2 சதவிதம் அதிகரித்து ரூ.1,93,384 கோடியாக உள்ளது.

கடந்த மாதம் உள்நாட்டு ஜி.எஸ்.டி வருவாய் ரூ. 1.41 லட்சம் கோடியாக இருந்தது. இறக்குமதிகள் மீது வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி 10.1 சதவீதம் உயர்ந்து ரூ. 52,253 கோடியாக இருந்தது.

மொத்தமாக திரும்பப் பெறும் தொகை 3.1 சதவீதம் குறைந்து ரூ.22,665 கோடியாக இருந்தது. பணத்தைத் திரும்பப் பெறுதல்களைக் கணக்கில் கொண்ட பிறகு ஜனவரி மாதத்திற்கான நிகர ஜி.எஸ்.டி வருவாய் ரூ. 1.70 லட்சம் கோடியாக இருந்தது.

ஜனவரியில் செஸ் வரி வசூல் (புகையிலைப் பொருட்களில் இருந்து) ரூ.5,768 கோடியாக இருந்தது.