இந்திய பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு அமர்வாக நடைபெற்றது. முதல் அமர்வு ஜனவரி 28-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 13-ந்தேதி வரை நடைபெற்றது. 2-வது அமர்வு மார்ச் 9-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில் வருகிற 16-ந்தேதிக்கு சிறப்பு கூட்டத்தை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் பெண்களுக்கு பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகிய சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை. என்றாலும் யூகச் செய்திகள் பதவி வருகின்றன.
இந்த நிலையில் மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு தேர்தலில் ஆதாயம் தேடுவதற்கான சிறப்பு கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தேர்தல் விதிமுறையை மீறுவதாகும் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு 30 மாதங்களாக தூங்கிவிட்டு, தற்போது பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்து, தேர்தல் சீசனில் இரட்டை ஆதாயம் பெற முயற்சி செய்கிறது.
தொகுதி வரையறையின்படி, அதிகாரப்பூர்வமற்ற முறையில் நாங்கள் கேள்விப்பட்டதன்படி, பல மாநிலங்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்றார்.
தற்போது 543 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதை 816 தொகுதிகளாக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.