இந்தியா

பிரதமர் மோடி உடன் கூகுள் CEO சுந்தர் பிச்சை சந்திப்பு!

செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.

டெல்லியின் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 6 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 21-ந்தேதி முடிவடைகிறது.

70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள Google CEO சுந்தர் பிச்சை பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார்.

தொழில்நுட்பம், AI, புதிய கண்டுபிடிப்புகள், இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் சூழல் அமைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT