இந்தியா

தெருநாய் கடித்து சிறுமி உயிரிழந்த விவகாரம் - 4 டாக்டர்கள் மீது வழக்கு

புனலூர் ஆஸ்பத்திரி டாக்டர்களின் அலட்சியமே சிறுமி உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

கேரள மாநிலம் பத்தனாபுரத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவரை கடந்த ஆண்டு மே மாதம் தெருநாய் ஒன்று கடித்தது. உடனே புனலூர் அரசு தாலுகா ஆஸ்பத்திரிக்கு சிறுமியை பெற்றோர் கொண்டு சென்றனர். தெருநாய் கடித்ததால் ரேபிஸ் நோய் தாக்கி சிறுமியின் நிலைமை மோசமானதால் பின்னர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

இந்த விவகாரத்தில் புனலூர் ஆஸ்பத்திரி டாக்டர்களின் அலட்சியமே சிறுமி உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த கோர்ட்டு, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி புனலூர் அரசு தாலுகா ஆஸ்பத்திரி மேற்பார்வையாளர் டாக்டர் சுனில் குமார் உள்பட 4 டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.