திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பரவக்காடு பகுதியை சேர்ந்தவர் அபி. இவர் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிறுமி ஒருவரிடம் நெருங்கி பழகியுள்ளார். அதனை கூறி அந்த அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்பு அந்த சிறுமியை பரவக்காட்டை சேர்ந்த டோனி என்கிற ஜாக்கி என்பவரிடம் ஒப்படைத்திருக்கிறார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், அபி மற்றும் ஜாக்கியை கைது செய்தனர். அவர்களது வசம் இருந்த அந்த சிறுமி மீட்கப்பட்டார். இதேபோல் வேறு பெண்கள் யாரையாவது பாலியல் பலாத்காரம் செய்தார்களா? என்று கைதான இருவரிடமுடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.