இந்திய ராணுவத்தின் தளபதியான மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
ராணுவத்தின் துணைத் தளபதியாக பணியாற்றி வந்த லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதியை, அடுத்த ராணுவ தளபதியாக நியமித்து கடந்த 12-ந்தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
ராணுவ துணை தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் திவேதி, நாட்டின் 30வது ராணுவ தலைமை தளபதியாவார். இவர் ராணுவத்தில் பல முக்கிய பதவிகளில் இருந்துள்ளார்.